தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, உண்மையான குற்றவாளிக்குத் தண்டனைப் பெற்றுக்கொடுக்கப்படுமென அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஐந்து வருட காலமாக பா.ஜ.க அரசு லோக்பால் சட்டத்தை ஏன் அமுல்படுத்தவில்லையெனவும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்தவகையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலிலதாவின் மரணம் குறித்த உண்மையை நிலையை அ.தி.மு.க ஆதரவாளர்களிடம் தெரிவிப்பதே எமது முதற் கடமையென மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.