போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகளின் பின்னணியில் அரசியல்வாதிகளே உள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
தெற்கு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதுஅவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நாட்டில் இடம்பெற்று வரும் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளின் பின்னணியில் சில அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்.
இது ஓர் ஆபத்தான நிலைமையாகும், போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி எடுத்து வரும் நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிக்கின்றது.
போதைப் பொருள் வர்த்தகத்தின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்.
இவ்வாறான ஓர் நிலைமையில் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும்.
சில யாசகர்களைப் போன்று வந்து ஒன்றிரண்டு நாட்களில் செல்வந்தர்களாக மாறி விடுகின்றனர்.
போதைப் பொருள் காரணமாக அழிவடைந்து செல்வது எமது எதிர்கால சந்ததியினரேயாவர்.
பிள்ளைகள் போதைப் பொருள் பயன்பாட்டினால் எத்தனை தாய்மார் கண்ணீர் சிந்துகின்றார்கள்.
எவ்வாறெனினும், போதைப் பொருள் ஒழிப்பு குறித்து ஜனாதிபதியின் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை என கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.