பெண்ணொருவர் ரயிலில் மோதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கம்பஹா மற்றும் வெயங்கொடை ரயில் நிலையங்களுக்கு இடையில் மகலெகொட ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிகே கடுகதி ரயிலில் மோதுண்டு குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
மகலெகொட பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய வயோதிப பெண்ணொருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து குறித்த வயோதிப பெண் எழுதியதாக கூறப்படும் கடிதமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , குறித்த பெண் தற்கொலை செய்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் , அவரின் நினைவில் வாழ்ந்து வந்த குறித்த பெண் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வெயங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மனதை உருக்கும் குறித்த கடிதம் இதோ…
” எனது கணவர் அன்பிற்குரியவர்.
எனது தாய் தந்தையை போன்று என்னை கவனித்துக்கொண்டார்.
என் மனம் துன்பப்படும் வகையில் எந்தவொரு கூடாத வார்த்தையும் என் வாழ்வில் அவரிடம் இருந்து கேட்டதில்லை.
அடுத்த ஜென்மத்திலும் அவர் எனக்கு கணவராக கிடைப்பாராக.
எனக்கே கணவராக வேண்டும்… எனக்கே கணவராக வேண்டும்”