முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்றும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல – அகுரேகொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு படை தலைமையகம் குறித்த கொடுக்கல் வாங்கல்களின் போது கோத்தபாய ராஜபக்ச மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவின் நேரடி உத்தரவின் அடிப்படையில் இந்த கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இது தேசிய பாதுகாப்பு விவகாரம் தொடர்பிலானது என்ற காரணத்தினால் தகவல்களை வழங்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
கட்டடத் திட்டம் தவிர்ந்த ஏனைய கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அமைச்சரவை பத்திரமொன்றை கொண்டு வந்து அதன் ஊடாக தகவல்கள் வழங்கப்படுவதனை நிறுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது