Loading...
மாரவில நீதிமன்ற வளாகத்திலுள்ள லிப்ட் திடீரென செயலிழந்தமையினால் நபர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.
நேற்று காலை 9.30 மணியளவில் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்த போது, லிப்ட் இவ்வாறு செயலிழந்துள்ளது. எனினும் அதில் ஒருவர் மாத்திரமே பயணித்துள்ளார்.
நான்கு மாடி நீதிமன்ற கட்டடத்தில் மின்சார லிப்ட்டினை நீதிமன்ற ஊழியர்கள் மாத்திரமே பயன்படுத்துகின்றனர்.
Loading...
அதற்கமைய நீதிமன்ற ஊழியர்கள் இரண்டாவது மாடியில் இறங்கிய பின்னர் நபர் ஒருவர் அடுத்த மாடிக்கு செல்ல அதில் பயணித்துள்ளார்.
இந்நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமையினால் லிப்ட் இடையில் நின்றுள்ளது. இதனால் அதில் இருந்த நபர் பயத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர் குறித்த நபரை காப்பாற்றியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
Loading...