ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சுயாதீனமாக செயற்பட தீர்மானம் எடுக்கப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பாலும் அடுத்த வாரம் இந்தத் தீர்மா்னத்தை அவர் எடுப்பார் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. பொதுஜன பெரமுனவினதும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் தற்போதைய நிலைமை குறித்து மஹிந்த அமரவீர எம்.பி. அதிருப்தியில் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கட்சியின் செயற்திட்டம் தொடர்பில் காணப்படும் குறைபாடுகளை மஹிந்த அமரவீர எடுத்துக் காட்டியுள்ளதாகவும், இதனால், ஏற்பட்டுள்ள அதிருப்தியில் அவர் விரைவில் சுயாதீனமாக செயற்பட தீர்மானம் எடுக்கப் போவதாகவும் அவ்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அடுத்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்க யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இதன்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று யோசனைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ஊடகங்களில் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.