Loading...
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காரைக்காடு பகுதியில் புதையல் தோண்டிய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதில் விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பக்கோ இயந்திரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் சிங்களவர் ஒருவர் உட்பட 5 பேர் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Loading...