கோலிவுட்டில் படிப்படியாக முன்னேறி வந்துள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நல்லா நடிக்கிற பொண்ணு என்று பெயர் எடுத்துள்ளார். கனா படத்தில் அவரின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை.
இந்நிலையில் காதல், சினிமா, ஆண்கள் பற்றி பேசியுள்ளார் ஐஸ்வர்யா. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
காதல்
நான் சிங்கிள். காதல் விஷயத்தில் நான் லக்கி இல்லை. நான் பிளஸ் 2 படிக்கும் போது முதன்முதலாக காதல் முறிவு ஏற்பட்டது. நான் காதலித்த பையன் என் தோழியுடன் சென்றுவிட்டான். என் தோழியும், அவனும் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டார்கள்.
காதல் முறிவு
பல ஆண்டுகள் கழித்து மீண்டும் காதலித்தேன். ஆனால் நாங்கள் பிரிய வேண்டியதாகிவிட்டது. காதலித்தால் அது காலம் எல்லாம் நிலைக்க வேண்டும் என்று நினைப்பேன். சிலர் பல காலம் காதலித்துவிட்டு பிரேக்கப் ஆன உடனேயே இன்னொருவரை எப்படி தான் காதலிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
என்னை பொறுத்தவரை காதல் முறிவு ஏற்பட்டால் அதில் இருந்து வெளியே வர குறைந்தது ஓராண்டு ஆகும். தற்போதைக்கு வேலையில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன்.
ஒரு நடிகையை காதலிப்பது எளிது அல்ல. ஆனால் காதலிப்பது ஒரு அருமையான உணர்வு. பரவாயில்லை நான் காத்திருக்கிறேன். எனக்கு பந்தா பண்ணும் பசங்க, வெட்டி சீன் போடும் பசங்களை பிடிக்கவே பிடிக்காது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.