காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழப்பு, குறித்த சம்பவத்தின் விசாரணைப் பதிவுக்குச் சென்ற ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர், குறித்த உயிரிழந்த பெண் சடலத்தை திறந்து பார்த்தவுடன் ஒரு வித நடுக்கம் ஏற்றபட்ட பின்னர் உடனடியாக சந்திவெளி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வழியில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் முக்கிய விடயம் ஒன்று என் கண்முன்னே பதிவாகியது, அதாவது இறந்தவரின் கணவனார் மயக்கமற்ற நிலையில் தூக்கிவந்தவேளை பொலிசாரையும் தூக்கி சுமந்த பொதுமக்கள், ஒரு முச்சக்கர வண்டியில் உயிரிழந்தவரின் கணவர் உட்பட அவர் உறவுகள் ஏறாவூர் பொலிசுக்கு முறைப்பட்டுக்கு சென்றவேளை பொலிசார் கவலைக்கிடமான நிலையில் இருந்ததை அவதானித்த நான் முச்சக்கர வண்டியில் இருந்தவர்களிடம் காரசாரமாக பேசிய பின்னர் அவர்களை இறக்கி கவலைக்கிடமான பொலிசாரை ஏற்றி அனுப்பியிருந்தேன், மறுகணமே சற்று மணித்துளிகள் கடந்த நிலையில் அந்த பொலிசாரும் இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது. இதுதான் மனிதனின் இன்றைய வாழ்க்கைளிக் யதார்த்தம் என குறிப்பிடும் பிரதேச வாசிகள்..