மருத்துவமனை ஒன்றில் உள்ள மின்தூக்கியில் சிக்கி சுமார் ஒரு மணி நேரம் வெளியில் வர முடியாது தவித்து போனதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த இந்த சம்பவத்தின் போது முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மருத்துவர் ஒருவரும் உடன் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தினால், குழம்பி போன மருத்துமனை அதிகாரிகள் மின்தூக்கிக்குள் ஒக்சிஜன் வழங்கியதாகவும் மருத்துவமனையை சுற்றிலும் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன், தீயணைப்பு வீரர்களையும் அழைத்திருந்தனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தனது வீட்டில், அண்மையில் நாடாளுமன்றத்தில் மின்தூக்கியில் உறுப்பினர்கள் சிக்கி கொண்ட சம்பவம் குறித்து பேசும் போதே மகிந்த ராஜபக்ச தனக்கு நேர்ந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார்.
எனினும் சம்பவம் நடந்த மருத்துவமனை பற்றிய தகவலை அவர் வெளியிடவில்லை.