யாழ்ப்பாணத்தில் இரு சிறுவர்கள் கடத்தப்பட்டமையினால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
பண்டத்தரிப்பு வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
13 வயதான சதீஸ்வரன் வினோத், 8 வயதான சதீஸ்வரன் பூஜா ஆகியோரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.
ஆண் ஒருவருடன் வந்த பெண்ணே இவ்வாறு இருவரை வலுக்கட்டாயமாக காரில் அழைத்துச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டிற்கு அருகிலுள்ள பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில், வெள்ளை நிற காரில் அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் வினோத், இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரியிலும், பூஜா சாந்தை சிற்றம்பலம் வித்தியாலயத்திலும் கல்வி கற்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கடத்தப்பட்டதாக பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாக பொலிஸாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறுவர் கடத்தல் விவகாரத்தினால் பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.