Loading...
மோட்டார் வாகனத்தை இறக்குமதி செய்வதாகக் கூறி, 43 இலட்சம் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
தங்காலை, திஸ்ஸ வீதி இலக்கம் 106ஃயு என்ற முகவரியைச் சேர்ந்த சமன்குமார ஜயசிங்ஹ என்ற சந்தேக நபர் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணை அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Loading...
இந்த சந்தேக நபர் பல இடங்களில் இவ்வாறு நிதி மோசடிகளை மேற்கொண்டதாக பொலிசாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருக்கும் பட்சத்தில் அவை தொடர்பான தகவல்களை தொலைபேசி மூலம் வழங்க முடியும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்
Loading...