Loading...
பாதாள உலக குழுக்களை சேர்ந்த 30 இற்கும் அதிகமான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தயார் செய்துள்ள பொலிஸ் விசேட அதிரடி படையினர் அவர்களை கைதுசெய்ய விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
தென், மேல் மாகாணங்களை சேர்ந்த குறித்த பாதாள உலக குழுவினர் கடத்தல், கப்பம் பெறல், ஒப்பந்த கொலைகள் , போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை ஆகிய சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் என பொலிஸ் விசேட அதிரடி படையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
தற்சமயம் டுபாய் நகரில் கைது செய்யப்பட்டு, தடுத்துப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மாகந்துரே மதூசுடன் நேரடி தொடர்பில் இருந்த 07 பாதாள உலக குழுக்களின் தலைவர்களும் இந்த 30 பேர் கொண்ட பெயர் பட்டியலில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...