நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும், எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள்.
அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகப் பேசப்பட்டது. இதை இருவருமே மறுக்கவில்லை.
சமீபத்தில் இது குறித்து அண்மையில் பேசிய ஜெய் எனக்கு அஞ்சலியையும், அஞ்சலிக்கு என்னையும் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், ’மகளிர் மட்டும்’படத்துக்காக நடந்த தோசை சுடும்போட்டியில் இருவரும் ஒன்றாக நடந்தது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தங்கள் காதலை உறுதிப்படுத்தினர்.
அஞ்சலியின் பிறந்த நாளன்று ஜெய் காதல் பொங்க அனுப்பிய வாழ்த்து பரபரப்பைக் கிளப்பியது. இதனால் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக வெளியில் சுற்றுவதாகவும், இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் அதிகரித்த நிலையில், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.
இதேவேளை, இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு இது சற்று இன்ப அதிர்ச்சிதான்.