வேத விஞ்ஞானத்தின் படி சூரியன் சந்திரன் உட்பட ஒவ்வொரு கிரகமும் கடவுளின் ஆணைப்படி மனித வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.
மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் நவகிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
நவகிரகங்கள் நம் சக்தி ஓட்டத்திலும், அதிர்வுகளிலும் கூட ஆதிக்கம் செலுத்துகின்றன. சூரியன் சந்திரன் உட்பட்ட ஒன்பது கிரகங்கள் நம் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவதோடு அவற்றின் ஆழமான தாக்கத்தை நம் உடல், மனம் மற்றும் ஆத்மா மீது ஏற்படுத்துகின்றன.
கிரகங்களும் அவற்றின் ஆதிக்கமும்
புதனும் சுக்கிரனும் குறிப்பாக ஒருவரின் காதல், அழகு, மற்றும் ஆற்றலை பிரதிபலிக்கின்றன. நாம் மற்றவரோடு பழகுவது, நம் பழக்கவழக்கங்கள், ஆளுமை, உடல் மொழி போன்றவற்றையும் நவகிரகங்களே நிர்ணயிக்கின்றன என்பதை அறிவோம். ஆனால் நம் கூந்தல் வளர்ச்சிக்குக் கூட புதன், சுக்கிரன், சூரியன், சந்திரன் போன்றோர் காரணமாகின்றனர் தெரியுமா?
ஜோதிடமும் கிரகங்களும்
நம் உடலின் ஒவ்வொரு பகுதியும் கிரகங்களை மிகவும் ஆழமாக பிரதிபலிக்கின்றன. இந்த கிரகங்கள் பலவீனமாக இருந்தால் அது கூந்தல் வளர்ச்சியைப் பாதிக்கிறது.
ஜோதிடம் அதிகப்படியான முடி இழப்பு, வழுக்கை, உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி ஆகியவற்றுக்கு கிரகங்களின் பாதிப்பே காரணம் என்கிறது.
கிரகங்களும் தலை முடியும்
உடல்நல வல்லுநர்கள் சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளுதல், தலையை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், தயிர் மற்றும் யோகர்ட், தேங்காய் எண்ணெய் கொண்டு தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து பராமரித்தல் போன்றவற்றை பரிந்துரைத்தாலும், முடி பாதிப்பிற்கான காரணத்தை அறிந்து ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்ள ஜோதிடம் உதவுகிறது.
முடி வலுவிழத்தல்
சுக்கிரனும், சந்திரனும் சேர்ந்து வலுவிழந்து இருந்தால் உங்கள் தலை முடி மெல்லியதாக இருக்கும், இதனால் எதிர்பார்க்கும் வளர்ச்சி கிடைக்காது.
சிவனுக்கு பாலும், அரிசியும் கொடுப்பது ஒரு பரிகாரம். மேலும் நீங்கள் உங்கள் உணவில் பால் தயிர் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆயுர்வேத குறிப்பு
தலைக்குக் குளிக்கும் முன் யோகர்ட் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவ வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகே இதை செய்ய வேண்டும். புளிப்பான உணவையோ, புளிப்பான பழங்களையோ சாப்பிடக்கூடாது. இது சுக்கிரனை பலவீனப்படுத்தும்.
வழுக்கை
ஜோதிடத்தின்படி பலவீனமான புதனும், சூரியனும் உடலில் வளரும் முடியை பாதிக்கின்றன. சக்தி வாய்ந்த குருவின் பலத்தால் மட்டுமே இத்தகைய பாதிப்பை நீக்க முடியும். ஆனால் அப்படி இல்லை என்றால் நீங்கள் சூரியனுக்கு நீர் வழங்கி, அசைவம் மற்றும் மதுவைத் தவிர்த்தால் புதனும் சூரியனும் வலுப்பெறும்.
ஆயுர்வேத குறிப்பு
கொத்தமல்லி விதையை (தனியா) பொடியாக்கி ஒரு மேசைக்கரண்டி மஞ்சள் தூளுடன் கலந்து பசை போலாக்கி தலையில் தடவி இரவு முழுதும் அப்படியே வைத்திருந்து காலையில் தலையை அலச வேண்டும். இதை வாரம் இருமுறை செய்யலாம்.