Loading...
வட அவுஸ்திரேலியாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் அங்குள்ள மக்களை மட்டும் பாதிக்கவில்லை இயற்கைச் செல்வத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து பெய்த மழையும், அதனால் ஏற்பட்ட கடுமையான வெள்ளமும் கடலில் கலந்ததால், அவுஸ்திரேலியக் கடலில் உள்ள பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மழை நீருடன் கலந்த வண்டல் மண், உலகின் ஆகப் பெரிய பவளப்பாறையான Great Barrier Reef- மீது படிந்துள்ளது.
Loading...
அதனால் இயற்கையான வெளிச்சம் அந்தப் பாறையின் மீது விழவில்லை.
அந்த நிலை தொடர்ந்தால் பவளப் பாறைக்குப் பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என்று ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
Loading...