இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவத்தினர் சென்ற வாகனங்கள் மீது மோதி தாக்குதல் நடத்தியது சிவப்பு வண்ண கார் என சம்பவத்தை நேரிடையாக பார்த்த மக்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தற்கொலைப்படை தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதி ஆதில் தர் குறித்த சிவக்கு வண்ண வாகனத்தில் வேகமாக சென்று துணை ராணுவத்தினர் சென்ற வாகனம் மீது மோதினான் என்றும்,
அடுத்த நொடியில் அந்த சிவப்பு வண்ண காரும் துணை ராணுவத்தினரின் வாகனங்களும் வெடித்துச் சிதறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஜம்மு நகரம் முதலே அந்த சிவப்பு வண்ண கார் துணை ராணுவத்தினரின் வாகனங்களை பின் தொடர்ந்துள்ளதாக உயிர் தப்பிய ராணுவ வீரர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், துணை ராணுவத்தினர் சென்ற வாகனங்களின் கடைசி வாகனம் மீது மோத முயற்சித்த அந்த ஆதில் தர், திடீரென்று தமது திட்டத்தை மாற்றி, மூன்றாவது ராணுவ வாகனம் மீது மோதியுள்ளான்.
மட்டுமின்றி ராணுவ வாகனங்கள் வரிசையாக செல்வதால் இடைவெளி விட்டு வாகனத்தை ஓட்டுங்கள் எனவும் ஆதிலிடம் ராணுவத்தினர் பல முறை எச்சரித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தை நெரில் பார்த்த மக்களின் வாக்குமூலங்களை உறுதி செய்யும் வகையில் சம்பவ பகுதியில் இருந்து இக்கோ வாகனத்தின் உடைந்த பாகங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஆதில் தர்ருக்கு வெடிபொருட்களை வழங்கியவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஓராண்டுக்கு முன்னர் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் தொடர்பிலும் தற்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு குறிப்பிட்ட பயங்கரவாத இயக்கம் தம்மை ரகசியமாக தொடர்பு கொண்டதாக காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் பொலிசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
ராணுவ வாகனம் மீது இன்னொரு வாகனத்தை மோதவிட்டு தாக்குதல் நடத்துவதே அவர்களின் திட்டம் எனவும் அந்த நபர் அப்போது பொலிசாரிடம் தெரிவித்திருந்தார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் ஆதில் தர்ருக்கு வெடிபொருட்களை வழங்கியவர்களுக்கும் 2017 ஆம் ஆண்டு அர்ஜூ பஷீர் என்பவரை அணுகியவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.