மலேசிய கடவுச்சீட்டை பயன்படுத்தி லண்டனுக்கு செல்ல முயன்ற இலங்கையர்களான கணவனும் மனைவியும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் வைத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த இவர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர்கள் திட்டமிட்டு லண்டனில் குடியேறும் நோக்குடன் மலேசிய கடவுச்சீட்டுக்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் உள்ள முகவர் ஒருவரின் துணையுடனேயே இந்த தம்பதியினர் கடவுச்சீட்டுக்களை பெற்றுள்ளனர்.
இலங்கையில் இருந்து சென்னைக்கு சென்ற இவர்கள் பயணிகள் வருகை பிரதேசத்தில் இருக்கும் போது மலேசியாவிலிருந்து வந்த இருவர் கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளனர்.
இதனைடுத்து குறித்த இலங்கையர் பிரிட்டிஸ் எயார்வெய்ஸ்ஸை நோக்கி சென்றுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அதிகாரிகள் இலங்கையர்கள் இருவரையும் விசாரணை செய்தபோது உண்மை வெளியாகியுள்ளது.