Loading...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மேற்கு கடற்கரையை அண்மித்த பகுதியில் புலிகளின் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அடையாளம் காணப்பட்ட பகுதி தற்போது பளை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலை கொண்டிருந்த இந்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு உள்ளதாக பளை பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது.
Loading...
இந்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலிலேயே ஆயுத கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அங்கு வந்துள்ள பளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இயந்திரங்கள் மூலம் அகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
Loading...