Loading...
கிளிநொச்சி மாவட்டத்தின் ஐந்தாவது பிரதேச செயலாளர் பிரிவாக அக்கராயன் பிரதேச செயலாளர் பிரிவை உருவாக்க அமைச்சரவை அனுமதித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பிரதேசம் பல கிராமங்களை உள்ளடக்கிய பரந்த பிரதேசமாகும். இங்கு பெருமளவான மக்கள் வாழ்கிறார்கள். கிளிநொச்சியின் மேற்குப்பக்கமாக அமைந்துள்ள கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இந்த பிரதேசம் உள்ளடங்கியுள்ளது.
Loading...
தனியான பிரதேச செயலாளர் பிரிவாக மாற்றும்படி, அக்கராயன் பிரதேச மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு, விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். வன்னேரிக்குளம் பகுதியில் நடந்த நிகழ்வொன்றில் இதனை தெரிவித்தார்.
Loading...