Loading...
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் 8ம் திகதி வெளியிடப்பட சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத பட்சத்திலும், மார்ச் 8 மாலையில் அது வெளியாகலாமென நம்பப்படுகிறது.
Loading...
அறிக்கை வெளியாவதற்கு முன்னதாக அதன் பிரதியொன்று இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும். கொழும்பு அதன் பதிலை தயார் செய்யவும், அறிக்கையை ஆராயவும், காலத்தை உறுதிப்படுத்துவதற்குமாகவே பகிரப்படுகிறது. எனினும், இலங்கையுடன் இன்னும் அது பகிரப்படவில்லையென வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரோஜா சிறிசேன தெரிவித்தார்.
Loading...