வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வரும் நட்சத்திர தம்பதி ப்ரஜின் மற்றும் சாண்ட்ரா. இந்நிலையில் ப்ரஜின் கடந்த வாரம் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் மனைவி சாண்ட்ரா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த தருணத்திற்காக 10 வருடம் காத்திருந்ததாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பலர் சாண்ட்ரா மற்றும் ப்ரஜின் ஜோடிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வந்தனர். சிலர் ஏன், குழந்தை பெற்று கொள்ள பத்து வருடங்கள் ஆகியது என்பது போன்ற சில கேள்விகளையும் முன்வைத்தனர்.
தற்போது சாண்ட்ரா, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்… ஏன் குழந்தை பெற்று கொள்ள பத்து வருடங்கள் ஆனது என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டதால், பண உதவி மற்றும் ஆறுதல் சொல்ல கூட துணைக்கு யாருமே இல்லை. எங்களிடம் இருந்த சில பழைய உடைகளை மட்டுமே கொண்டுவந்து தான் எங்கள் வாழ்க்கையை துவங்கினோம்.
எங்களை காப்பாற்றி கொள்ள இத்தனை வருடங்கள் வேலை, வேலை என ஓடியதால் குழந்தை பற்றி யோசிக்க முடியவில்லை. ப்ரஜின் வேலை இன்றி சில காலம் இருந்தார். தற்போது சின்னத்தம்பி சீரியல் மூலம் அவருக்கு நல்ல பிரேக் கிடைத்துள்ளதால், நாங்கள் குழந்தை பெற முடிவெடுத்தோம்” என சாண்ட்ரா கூறியுள்ளார்.