இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் சுகாதார ஆரோக்கியம் மக்களுக்கு உகந்தது அல்லவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தெஹியத்தகண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்ததாவது…
நாட்டை முன்னேற்ற தேசிய பால் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். தேசிய பால் உற்பத்தி முன்னேற்றமடைந் தால் தான் தேசிய தொழிற்துறை மிருக வளங்கள் அபிவிருத்தியடையும்.
நான் இவ்வாறு கூறுவதால் பன்னாட்டு நிறுவனங்கள் என்னுடன் கோபப்படுகின்றன.
போதை வர்த்தகர்கள், மதுபாவனையாளர்கள், மருந்து விற்பனையாளர்கள் யார் என்னுடன் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை. பால்மா விடயத்தில் என்னால் அமைதியாக இருக்க முடியாது.