பதின்ம வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளர்.
கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார்.குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது ஆசிரியருக்கு எதிராக 345ஆம் பிரிவின் கீழ் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அத்தோடு சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிணை விண்ணப்பம் கோரினார்.எனினும் சிறுமிகளைத் துன்புறுத்துவது பாரதூரமான குற்றம் என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் சுட்டிக்காட்டியுள்ளார்.
சந்தேகநபரை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையில் சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவியை தண்டிப்பதாகக்கூறி, அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஆசிரியரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.