புல்வாமா தாக்குதலால் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ- முகமது என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் மறுத்து வருகின்றது. மேலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் பாகிஸ்தான் அரசு செயல்பட்டு வருகின்றது. இது உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பலி தீர்க்கும் விதமாக பாகிஸ்தான் இணையதளத்தை ஹேக் செய்து அதிரவிட்டுள்ளார் இந்தியா இளைஞர்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 4500 வீரர்கள் வாகனங்களில் ஜம்மு காஷ்மீருக்கு சென்று கொண்டிருந்தனர். புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி காரில் வெடி குண்டு மருந்துகளை நிரப்பி கான்வாயில் மீது மோதி வெடிக்க செய்தான். இந்த குண்டுவெடிப்பில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தியா இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தது. மேலும், பாகிஸ்தான் பயங்கரவாத்தை ஆதரித்து வருவதால், அந்த நாட்டிற்கு வழங்கியிருந்த வர்த்தக நட்பு நாடு என்ற அந்தஸ்தையும் திரும்ப பெற்றது. மேலும் பாகிஸ்தானுகான இந்திய தூரையும் திரும்ப பெற்றுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்த தாக்குதலுக்கு ஆழ்ந்த இரங்களையும், பாகிஸ்தானுக்கு எதிரான கண்டங்களையும் பதிவு செய்தன.
இந்தியா தனது பாதுகாப்புகாக எல்லை மீறியும் பயங்கரவாதிகளை சென்று அழிக்கலாம் என்று முழு ஆதரவையும் வழங்கியுள்ளது. இந்திய தூரகத்திற்கும் இது குறித்த செய்தியை அனுப்பியுள்ளது.
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியை உடடினயாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா முயற்சி செய்கின்றது. பாகிஸ்தான் அரசு அந்த நிதியை தவறாக பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தி வருகின்றது என்று இந்தியா தரப்பிலும் பல்வேறு முறை குற்ற சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.