Loading...
இலங்கையில் பேஸ்புக் ஊடாக பொலிஸாரை அவமதித்த இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் போலி பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தியுள்ளார்.
அதற்கமைய தேவையற்ற சொற் பிரயோகங்களால் பிட்டிகல பொலிஸாரை அவமதிக்கும் வகையில் பதிவுகளை இட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வெய்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
நடமாடும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வீதியில் சென்ற குறித்த இளைஞரை ஏதோ ஒரு குற்றச் செயலுக்காகக் கைதுசெய்திருந்தார்.பிறகு அவரது அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விடுதலையான குறித்த இளைஞன் பேஸ்புக் ஊடாக பொலிஸாரை அவமதிக்கும் பதிவுகளை பதிவிட்டதால் பிட்டிகல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Loading...