தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றிபெற்றது இந்த திரைப்படம். இதைத்தொடர்ந்து கவுதம் கார்த்தி நடிப்பில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது யாஷிகாவிற்கு.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியது விஜய் தொலைக்காட்சி. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, மக்களின் வரவேற்பை பெற்றார் யாஷிகா. தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் யாஷிகா.
இந்நிலையில் இவர் தற்கொலை செய்துகொண்டதாக, பெங்காலி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட அதை தன்னுடைய நண்பர்கள் மூலம் அறிந்து மிகவும் கோவமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் யாஷிகா.
சில நாட்களுக்கு முன்னர் சினிமா துணை நடிகை யாஷிகா என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவலை பெங்காலி நாளிதழ் ஒன்று யாஷிகா ஆனந்தின் புகைப்படத்துடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு தான் யாஷிகா இவ்வளவு கோபமாகியுள்ளார்.
What the hell :O https://t.co/xgG7ch6cIt
— Yashika Aannand (@iamyashikaanand) February 17, 2019