சகல தேர்தல்களிலும் வெற்றி பெற்று நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த இருப்பதாக அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த காலத்தில் மாற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே தலைமைத்துவம் வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.
கேகாலை கலிகமுவ தேர்தல் தொகுதியில் உள்ள கிராமிய வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.
ஜனநாயக ரீதியில் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர் பின்வாசலினாலேனும் அதிகாரத்தைக் கைப்பற்ற கடந்த காலத்தில் முயன்றதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கவில்லை. நாட்டிற்காகவும் கொள்கைக்காகவும் அனைத்து மக்களும் கடந்த காலத்தில் ஒன்றிணைந்ததாக அமைச்சர் கபீர் ஹாஷிம் நினைவுகூர்ந்தார்