என்னைக் காதலித்து ஏமாற்றிய நடிகர் அபி சரவணன் ஒரு மிகப்பெரிய ஃபிராடு. ஜல்லிக்கட்டு உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளில் மக்களிடம் பணம் வசூலித்து பல லட்சங்களை தனது சொந்த வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டவர்’ என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார் நடிகை அதிதி.
நேற்று கமிஷனர் அலுவலகம் வந்த அவர் தனது புகாரில்…’கேரளா மாநிலத்தை சேர்ந்த நான், சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தேன். பிறகு 2016ம் ஆண்டு ‘பட்டதாரி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானேன். என்னுடன் அபி சரவணன் (எ) சரவணகுமார்(35) என்பவர் நடித்தார். என் நடிப்புக்கு அவர் துணையாக இருந்ததால் நான் அவருடன் நட்பாக பழகினேன்.
புகைப்படத்தை வைத்து மிரட்டுகிறார்
பிறகு அவர் என்னை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக வற்புறுத்தினார். அதை நான் ஏற்றுக்கொண்டேன். பிறகு இருவரும் காதலராக பழகினோம். எங்கள் திருமணத்திற்கு என் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அபி சரவணன் சமூக வலைத்தளங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் விவசாயிகள் போராட்டத்திற்கு நிதி திரட்டினார். அந்த பணத்தில் அவர் 4 கார்கள் வாங்கி டிராவல்ஸ் நடத்தினார். மதுரையில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்று வாங்கினார். இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது எங்களுக்குள் தகராறு வந்தது.
அதே நேரம் அவருடைய முதல் படத்தில் நடித்த நடிகையுடன் அவருக்கு 3 ஆண்டுகள் பழக்கம் இருந்தது. இதுகுறித்து திருவனந்தபுரம் காவல் நிலைய பொலிசார் அழைத்து அவரை கண்டித்து அனுப்பினர். இது எல்லாம் எனக்கு தெரியாமல் இருந்தது. அபி சரவணனால் பாதிக்கப்பட்ட அந்த நடிகை என்னை தொடர்பு கொண்டு, ‘அவனை நம்பாதீங்க, என்னை காதலித்து ஏமாற்றி விட்டார். என்னுடன் சினிமாவில் எடுத்த புகைப்படங்களை வைத்து மிரட்டி வருகிறார்.
இதனால் என் தமிழ் சினிமாவில் வாழ்க்கையே பறிபோனது. நீ அவனை நம்பாதே’என்று கூறினார். அதன் பிறகு நான் அபி சரவணன் செல்போனை எடுத்து பார்த்த போது அது உண்மை என்று எனக்கு தெரிந்தது. இதனால் நான் அவரை விட்டு பிரிந்து வந்துவிட்டேன். பிறகு நான் உன்னை திருமணம் செய்து கொண்டேன் என்று என்னிடம் கூறினார். பின்னர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன்.
பொலியான சான்று
அப்போது திருமணம் செய்ததாக ஒரு சான்றை கொண்டு வந்தார். அதை ஆய்வு செய்த போது மதுரையில் போலியாக நான் திருமணம் செய்து கொண்டதாக உருவாக்கப்பட்ட சான்று என்று விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஜனவரி 15ம் தேதி என்னுடைய டிவிட்டர் பக்கத்தை முடக்கிவிட்டார். அதோடு இல்லாமல் என்னுடைய இ-மெயிலையும் முடக்கி அதில் இருந்து என்னுடைய பாஸ்வேர்ட், வங்கி கணக்கு எண்கள், பேன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து சென்று விட்டார். என்னை பற்றி தவறாகவும், நான் ஒருவருடன் ஒன்றாக வசித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பி வருகிறார்.
மூன்று நாட்களுக்கு முன்பு அபி சரவணனை நான் ஆட்களை வைத்து கடத்தியதாக புகார் அளித்துள்ளனர். தினமும் எனக்கு பல தொல்லைகள் கொடுத்து வருகிறார். எனவே, அபி சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது