அடுத்த 48 மணி நேரத்தில் ஊடகத்துறை அமைச்சராக ருவான் விஜேவர்தனவை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய ஊடகத்துறை அமைச்சர் பதவியில் இருந்து மங்கள சமரவீரவை நீக்கி விட்டு, அந்த பதவியில் ருவான் விஜேவர்தனவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கோரிக்கையை அடுத்து, ஜனாதிபதி ருவான் விஜேவர்தனவை அழைத்து ஊடகத்துறை அமைச்சர் பதவியை வழங்குவது குறித்து கலந்துரையாடியுள்ளதுடன் அதனை பெற்றுக்கொள்ள ருவான் விஜேவர்தன விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும் ஊடகத்துறை அமைச்சு பதவி கொஞ்சம் காரசாரமாக பேசக்கூடியவருக்கே பொருத்தமாக இருக்கும் எனவும் அது விஜேவர்தனவுக்கு பொருந்துமா என ஜனாதிபதி கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு தரப்பின் இணக்கத்துடன் வர்த்தமானி மூலம் ஊடகத்துறை அமைச்சை ருவான் விஜேவர்தனவுக்கு வழங்கிய பின்னர், பதவியில் சத்தியப் பிரமாணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.