கனடாவின் சில பகுதிகளில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எச்சரிக்கைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவல் கனேடிய காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எட்மன்டன், ஒட்டாவா உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு கடும் குளிருடனான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த பகுதிகளில் ஐந்து முதல் பத்து சென்டி மீட்டர் வரை பனிபொழிவு நிலவக்கூடும் என கனேடிய காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த பகுதிகளிலுள்ள மக்கள், அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த பகுதியின் வாகன ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை ஓட்டும் போது, மிகவும் பாதுகாப்பாக கையாளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.