உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி இன்று(வியாழக்கிழமை) சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
‘தாய்மொழியை ஊக்குவித்து நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகின்றது.
ஒவ்வொரு குழந்தையும் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தாய்மொழி தினத்தின் முக்கியமான நோக்கமாக காணப்படுகின்றது.
மொழி சார்ந்த பற்றென்பது, தாயன்புக்கு நிகரானது.
1952 ஆம் ஆண்டு இதே போன்றொரு நாளில், வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்குமாறு கோரி தலைநகர் டாக்காவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது உயிர்நீத்த 4 மாணவர்களின் நினைவாக 1999 ஆம் ஆண்டு இந்த நாள், சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
1999 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி நடைபெற்ற, பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய்மொழி நாளாக யுனெஸ்கோ அறிவித்தது.
பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாடு, கலாசாரம் என்பனவற்றின் தனித்தன்மையை பேணிப் பாதுகாக்கும் நோக்கிலான கவசமாக இன்றைய நாள் கொண்டாடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Johnson supports the UN in reiterating its commitment to linguistic diversity and multilingualism.
UNESCO has been celebrating #InternationalMotherLanguageDay for nearly 20 years with aim of preserving linguistic diversity and promoting mother tongue-based multilingual education. pic.twitter.com/gVeqR1ucTe— H & R Johnson (@HRJohnsonIndia) February 21, 2019