பிரெக்ஸிற் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்புதல் எட்டப்பட்டதாக, பிரதமர் தெரேசா மே தெரிவித்தார்.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன்-க்ளூட் ஜுங்கரை பிரதமர் மே நேற்று (புதன்கிழமை) பிரஸ்சல்ஸில் சந்தித்தார்.
இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேற்படி சந்திப்பு தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், ஐரோப்பிய ஆணையத் தலைவருடனான சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானதாக அமைந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறையாக வெளியேற வேண்டும் என்பதே இரு தரப்பினதும் எண்ணப்பாடாக உள்ளது. எனவே, அது தொடர்பாக முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.
இந்நிலையில், பிரெக்ஸிற் இராஜாங்க செயலாளர், பிரெக்ஸிற் செயலாளர் டற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.