இந்நிலையில் , பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் Zee தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த ராதிகா கௌசிக் என்ற தொகுப்பாளினியே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அவர் வசித்த அடுக்கமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து இவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் , சம்பவம் தொடர்பில் காவற்துறைக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து , சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பில் ராஜஸ்தான் காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் , அவருடன் அவரின் நண்பர் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராகுல் என்பவர் வசித்து வந்துள்ளதாகவும், சம்பவத்தன்று இருவருக்கும் கடுமையான வாக்கு வாதம் நடந்துள்ளதாகவும் , பின்னர் ராகுல் குளியலறை சென்ற போது தான் ராதிகா இவ்வாறு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.