சென்னையில் உள்ள பிரபல தனி்யார் மருத்துவமனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில், அழைப்பின் பேரில் நடிகை ஜோதிகா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
அடுத்தவர் உதவியில்லாமல் யாருமே இந்த உலகத்தில் வாழ முடியாது. அதற்காக, சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அடுத்தவர் உதவியை சார்ந்திருக்க முடியாது. அதேநேரம், சிறிய உதவியை செய்த ஒவ்வொருவரையும் நினைத்துக் கொண்டு இருக்கவும், நன்றி சொல்லிக் கொண்டிருக்கவும் முடியாது. ஆனால், பெரிய பெரிய உதவி செய்தவர்களே கூட, அந்தத் தகவலைக் கூட அடுத்தவருக்கும் சொல்லாமல், தெரியாமல் வைத்திருக்கும் பெருந்தன்மைக்கும், பெரிய மனதுக்கும் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். அது அவர்களுக்கான இயல்பு.
தொடர்ந்து அஜித் பற்றி பல மேடைகளில் ஜோதிகா பல நல்ல விஷயங்களை பேசிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பேசிய நடிகை ஜோதிகா நடிகர் விஜயகாந்த், மற்றும் நடிகர் அஜித் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை இவ்வாறு குறிப்பிட்டார்.
“ஏழை மக்களுக்கு உதவி செய்வதில் விஜயகாந்த், அஜித் இருவரும் அதிக அக்கறையுடன் இருப்பார்கள்.
நிறைய நல்ல உதவிகளை செய்வார்கள் ஆனால் அவர்கள் செய்யும் உதவி யாருக்கும் பெரிய அளவில் தெரிவதில்லை. அதைப் பற்றி குறைந்தபட்சம் அவர்கள் பேசுவது கூட கிடையாது” என்று பெருமையோடு கூறினார்.
தொடர்ந்து அஜித் பற்றி பல மேடைகளில் ஜோதிகா பல நல்ல விஷயங்களை பேசிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.