பசுவை தகவல்:திருமணம் என்பது நிறைய பொருத்தம் பார்த்து பண்ண வேண்டிய விசேஷம். அப்படிப்பட்ட திருமணம் சில பேர்களுக்கு தட்டிக் கொண்டே போகும்.
நிறைய வரன்கள் வந்தாலும் எதுவுமே சீக்கிரமாக அமையாது. சீன முக ஜோதிட வல்லுநர்கள் இப்படி சில அம்சங்களால் திருமணம் தாமதமாகிறது என்பதை பற்றி அவர்கள் விரிவாக கூறியுள்ளனர்.
அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
எந்த தோஷமாக இருந்தாலும் அந்தத் தோஷங்களைத் தாண்டி நமக்கெல்லாம் தேவை… சந்தோஷம்தான்! அந்த சந்தோஷம்… மன அமைதியில் இருந்து கிடைக்கிறது. மன அமைதி என்பது, தெய்வ வழிபாட்டின் மூலமே நமக்குக் கிடைக்கும். ஆகவே, தெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து கொண்டே இருங்கள் அன்பர்களே!
தடினமான, முரடான கூந்தல்
ஒருவரின் கூந்தல் அடர்த்தி என்பது அவரது உடம்பில் உள்ள இரத்த ஓட்டத்தை பொருத்தது. தடினமான கூந்தல் உடையவர்கள் திருமணத்தை தள்ளிப் போடுபவர்களாக இருப்பார்களாம். அதே மாதிரி நேரான கடினமான முடி உடைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளது என்று சீன ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
அகன்ற நெற்றி
சீன முக ஜோதிடப்படி நெற்றி என்பது பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பை குறிக்கிறது. எனவே அகன்ற நெற்றியை உடையவர்கள் நெருப்பு ஆதிக்கத்தை அதிகம் கொண்டவர்கள். இத்தகைய நெற்றியை உடைய பெண்கள், ஆண்கள் அதிக மன அழுத்தம் கொண்டவராக இருக்கிறார்கள். இதனால் இவர்களின் திருமணம் தள்ளிப் போதல் அல்லது உறவுகளில் சிக்கல் உண்டாகிறது.
உயர்ந்த நெற்றி
அதே மாதிரி உயர்ந்த நெற்றியை உடைய நபர்களும் எப்பொழுதும் தங்கள் மனதை அடிக்கடி மாற்றக் கூடியவராக இருக்கிறார்கள். இதனால் இவர்கள் சரியான துணை வரும் வரை காத்திக் கொண்டே இருப்பார்களாம்.
மெல்லிய புருவங்கள்
மிகச் சிறிய மெல்லிய புருவங்களை கொண்ட நபர்கள் ரொம்ப கூலான நபர்களாக இருப்பார்களாம். இதனால் ரொம்ப கூலாகவே தாமதமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து கொள்வார்களாம்.
அதிக அடர்ந்த புருவங்கள்
மிகவும் அடர்த்தியான புருவங்களை உடைய நபர்கள் எல்லாவற்றையும் பற்றி அதிகமாக யோசிப்பார்களாம். அவர்கள் தேவையற்ற விஷயங்களை விடவும் மாட்டார்கள், அதே நேரத்தில் சிறிய விஷயத்தை பெரிதாக்கியும் பார்ப்பார்களாம். இதனால் திருமணத்தின் போது வருகின்ற பல நல்ல வாய்ப்புகளை இழந்து விடுகிறார்கள். இதனாலேயே இவர்களுக்கும் திருமணம் லேட் ஆகி விடுகிறது என்கிறது சீன ஜோதிடம்.