லண்டனில் வசித்து வரும் பத்து வயதுடைய இவர் ஒரு சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை. இவர் சிறு வயதில் இருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் கூடியவர்.
ஈழத்து சிறுமியான சஹானா தயாபரன் அவர்கள் தனது ஏழு வயதில் இருந்து பூப்பந்தாட்ட விளையாட்டை விளையாடி வருகிறார்.
மேலும், இவர் பூப்பந்தாட்டம் மட்டுமன்றி கூடைப்பந்து, நீச்சல், Athletics, cross country, கால்ப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களையும் ஆர்வத்துடன் விளையாடி வருகிறார்.
இங்கிலாந்தில் தேசிய தரவரிசையில் பதின்மூன்று வயதுக்கு உட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவில் இவர் ஐந்தாம் இடத்திலும் இரட்டையர் பிரிவில் மூன்றாம் இடத்திலும் உள்ளார். இது மட்டுமின்றி Hertfordshire country பிரிவில் முதல் இடத்திலும் உள்ளார்.
இது தவிர English badminton national champions 2018 ல் இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் இதுவரை 8 தங்கப் பதக்கங்களையும் 12 வெள்ளி பதக்கங்களையும் 18 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
குறுகியகாலப் பகுதியில் நம் சிறார்கள் விளையாட்டுத் துறையில் பல சாதனை படைத்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது.
இவர்களின் சாதனைகளுக்கு உறுதுணையாக இருப்பதுடன் மேலும் பல சாதனையாளர்களை உருவாக்குவதற்கும் நாம் கைகொடுப்போம்…