ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் நாளை விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பின் போது எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உள்ளடக்கிய பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில், கடந்த 6 ஆம் திகதி இரவு, இருவருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றன.
சுமார் 2 மணித்தியாலங்கள் நடந்த இந்தப் பேச்சுக்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாசிறி ஜெயசேகர, மஹிந்த அமரவீர, தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டக்ளஸ் தேவானந்தா, வாசுதேவ நாணயக்கார, ஏ.எச்.எம்.அதாவுல்லா, திஸ்ஸ விதாரண உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கான, பேச்சுக்களை நடத்துவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவிடம் இரண்டு வாரங்களுக்குள் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.