Loading...
அணு ஆயுதக்களைவு தொடர்பானஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்திற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ.அஸீஸ், குறிப்பிட்டுள்ளார்.
Loading...
ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் அணு ஆயுதக்களைவு தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்தோடு இந்த விடயம் தொடர்பாக, ஒரு ஆக்கபூர்வமான அணுகுமுறையை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட உறுப்பினர்களிடம் ஏ.எல்.ஏ.அஸீஸ் வலியுறுத்தினார்.
Loading...