நாகபட்டினம் மாவட்டத்தில் இருக்கும் நாகூருக்கு அருகேயுள்ள திருபாயத்தான்குடி பி.எஸ்.ஆர்.காலனி பகுதியை சார்ந்தவர் பரசுராமன் (40). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் அனுராதா (வயது 30). இவர்கள் இருவருக்கும் 14 வயதுடைய விக்னேஷ் என்ற மகனும்., 7 வயதுடைய ஆகாஷ் என்ற மகனும் இருக்கின்றனர்.
இவர்கள் இருவருக்கும் இருந்த குடும்பத்தகராறு காரணமாக அனுராதா திடீரென தூக்கில் பிணமாக தொங்கினார், இந்த தகவலானது காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வெளியான பிரேத பரிசோதனையின் முடிவில் அனுராதா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அனுராதாவின் கணவர் பரசுராமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., அனுராதாவை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது.
காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் வெளியான தகவலானது., பரசுராமனுக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது, இந்த தகவலை அறிந்த அனுராதா இது குறித்து தனது கணவர் பரசுராமனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.
சம்பவத்தன்று அதேபோன்று தகராறு ஏற்பட்டது, ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பின்னர் உடலை தூக்கில் தொங்கவிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியுள்ளார். இந்த தகவல் காவல்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது., இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.