உலகிலேயே பணக்கார விலங்கினம் என்ற பெயரை பிரபல ஆடை வடிவமைப்பாளரின் சவ்பெட் (Choupette) என்ற பூனை பெற்றுள்ளது.
ஆயிரத்து 210 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுடன் குறித்த பூனைக்கு இந்தப் பெயர் கிடைத்துள்ளது.
உலகின் மிகப் பெரிய ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த கார்ல் லாகஃபெட் (Karl Lagerfeld) நேற்று முன்தினம் தனது 85 வது வயதில் காலமானார்.
சட்டம் அனுமதித்ததால் தமது செல்லப்பிராணியான சவ்பெட்டையே திருமணம் செய்து கொள்வேன் என்றும்,
அவளின் நீலக் கண்களுடன் தாம் கண்களாலேயே அவ்வப்போது உரையாடுவதாகவும் நகைச்சுவையாக குறித்த ஆடை வடிவமைப்பாளர் தெரிவித்திருந்தார்.
தமது சொத்தின் வாரிசு தனது பூனை என்றும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு தமது மகன் உள்ளிட்ட வாரிசுகளுக்கும் சொத்துக்கள் உண்டு என விளக்கமளித்தார்.
இந்நிலையில், அவர் மறைவுக்குப் பின் இந்திய மதிப்பில் ஆயிரத்து 210 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை சவ்பெட் பூனையின் பெயரில் உயில் எழுதி வைத்து அதற்காக அறங்காவலர்களை நியமித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.