அவுஸ்திரேலியாவில் Westpac வங்கிக்கு எதிராக class action எனப்படும் கூட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன்பெறுவதற்கு தகுதியில்லாத வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன்களை வழங்கியது தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் Westpac வங்கி வழங்கிய வீட்டுக்கடன்கள் தொடர்பாகவே இந்த வழக்கு தொடரப்படவுள்ளது.
கடனை மீளச்செலுத்தமுடியாத வாடிக்கையளார்களுக்கு வீட்டுக்கடன்களை வழங்கியதன் மூலம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் சுமையை ஏற்படுத்தியது.
அது மட்டுமல்லாமல் வங்கி வரைமுறைகளை மீறியுள்ளதாகவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் royal commission விசாரணைகளுக்கு பிறகு மேற்கொள்ளப்படவுள்ள முக்கியமான வழக்கு இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.