அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், அரசாங்கத்தில் இரண்டுமுறை உயரிய பொறுப்பு வகித்தவருமான ஜுலி பிஷப், தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக கூறியுள்ளார்
நீண்ட காலமாக நிலவிவந்த வதந்திகளுக்கு முடிவு கட்டும் வகையில் தனது இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஜுலி பிஷப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, லிபரல் கட்சியின் முதலாவது பெண் துணைத் தலைவராகவும், அவுஸ்திரேலியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியமையை எண்ணி பெருமை அடைவதாகவும் கூறியுள்ளார்.
ஜுலி பிஷப், அவுஸ்திரேலியாவில் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார்.
பின் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவரது அரசியல் எதிர்காலம் குறித்த வதந்திகள் பரவலாக எழுந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.