நொச்சியாகம பொலிஸ் பிரிவின் சமகிபுர பிரதேசத்தில் கூர்மையாய ஆயுத்த்தில் தாக்கப்பட்ட பெண்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த பெண்கள் இருவரில் 21 வயதான பெண் ஒருவர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 6.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பெண்களும் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில் குறித்த பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
21 வயதான சமகிபுர, நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்த செவ்வந்தி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராகும்.
உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறலு்ளது.
மரணத்திற்கு காரணமான சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சினைக்கமைய இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் இரண்டாவது கணவராகும். உயிரிழந்த இளம் பெண் காயமடைந்த பெண்ணின் முதலாவது கணவருக்கு பிறந்தவர் என தெரிவந்துள்ளது.