Loading...
ஒப்போ நிறுவனத்தின் துணை பிராண்டு ரியல்மி தனது புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 4 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ரியல்மி தனது புதிய ஸ்மார்ட்போனிற்கென டீசர்களை வெளியிட்டு வந்தது. இதில் ஸ்மார்ட்போன்களில் செங்குத்தாக பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ரியல்மியின் முந்தைய ஸ்மார்ட்போன்களான ரியல்மி 2 மற்றும் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் கிடைமட்டமாக டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டிருந்தது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் டைமண்ட் கட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ரியல்மி 1 மற்றும் ரியல்மி 2 மாடல்களிலும் டைமண்ட் கட் வடிவமைப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்மார்ட்போனுடன் கவர்ச்சிகரமான கேஸ் வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் அழைப்பிதழில் “Power Your Style” எனும் டேக்லைன் இடம்பெற்றிருக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், ஏ.ஐ. என்ஜின், ஜி.பி.யு. அக்செல்லரேஷன் மற்றும் கேமிங் மோட் உள்ளிட்டவை வழங்கப்படும் என ரியல்மி பிராண்டு தலைமை செயல் அதிகாரி உறுதிப்படுத்தி இருந்தார்.
ரியல்மி 2 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ.8,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன் போட்டியை ஏற்படுத்தும் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
Loading...