சுகவீனமுற்றிருந்த முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியாலையில் சேர்க்கப்பட்டார்.
வைத்தியாலை விடுதியில் சேர்க்கப்பட்ட அவர் மதியம் உணவு வாங்குவதற்காக தனது பணப் பையைத் தேடியபோது அது காணாமல் போனது தெரியவந்ததது.
வெளிநோயாளர் பிரிவிலும் தேடிக் காணாத நிலையில் இந்த விடயம் தொடர்பில் நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
அங்கு பொருத்தப்பட்டிருந்த மறைகாணிகளின் பதிவுகளை சோதித்தபோது பெண்ணொருவர் வெளிநோயாளர் பிரிவில் காணப்பட்ட பணப் பையை எடுப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வைத்தியாலை பொலிஸார் மூலம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது .
சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் வசிக்கும் சாவகச்சேரி சந்தை வியாபாரியான குறித்த பெண்ணைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.