ஓடும் பேருந்து ஒன்றில் திடீர் சுகயீம் அடைந்த நிலையில், சுயநினைவை இழந்து போராடிய பௌத்த தேரர் ஒருவருக்கு முன்வந்து உதவிய முஸ்லிம் நபருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்துள்ளன.
மடவளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்றிலேயே இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்தில் பயணித்த பௌத்த தேரர் திடீர் சுகயீனம் அடைந்த நிலையில் சுயநினைவை இழந்தார்.
இதனால் அந்த தேரருடன் வந்த தேரர்களும் செய்தவறியாது திகைத்து நின்றனர்.
அத்துடன், குறித்த பேருந்தில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பலரும் பயணித்த போதிலும், தேரருக்கு உதவ எவரும் முன்வரவில்லை.
ஓடும் பஸ்ஸில்….<பதற்ற நிலை><பேரின மதகுரு கடும் சுகயீனம்>காலம்:- 22-02-2019/வெள்ளி/ காலை 8:20இன்று மடவளையில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் பஸ்ஸில் முன் சீட்டில் அமர்ந்திருந்த பேரின மதகுரு திடிரென வாந்தி, வாயில் நுரை தள்ள, கண்கள் செருகிய நிலையில் சுயநினைவை இழந்து சீட்டில் பக்கவாட்டில் சரியும்போது அவருக்கு இரண்டு சீட்கள் தாண்டி இருந்த நான் துரிதமாக எழுந்து அவரைத் தாங்கிப் பிடித்தேன்.அவரை கைகளில் தாங்கியபடி முதுகில் தட்டி பேச்சுக்கொடுத்து சுயநினைவை அடையச் செய்தேன். தொடர்ந்து (சளியுடன கூடிய) வாந்தி எடுத்து சுயநினைவை அடைந்தார். அதிக சளித்தொல்லையால் சாப்பாடும் சமிபாடைந்திருக்கவில்லை. பேக் ஒன்றை பெற்று வாந்தியை எடுக்க உதவினேன். அவர்மேல் படிந்திருந்த வாந்தியை வாய் முதற்கொண்டு துடைத்து விட்டேன்.நான் கவனித்த வகையில் நானும் இன்னொருவரும் தான் முஸ்லிம்கள். பஸ்ஸில் அனைத்து சீட்களும் நிரம்பி நின்று கொண்டும் சிலர் பயணித்தனர். இருந்தாலும் ஒருவரும் உதவ முன்வரவில்லை. உதவுங்கள் உதவுங்கள் என்று சொன்னார்களே தவிர. உடன் வந்திருந்த 25 வயதையொத்த மதகுருவும் என்ன செய்வதென்று திகைத்து நின்றாரே தவிர ஒத்துழைக்கவில்லை.#இருந்தாலும் ஆச்சரியம் கலந்த வெட்க உணர்வு அவர்கள் முகத்தில் விளங்கியது. பலர் போட்டோ/வீடியோ எடுப்பதும் விளங்கியது.#பஸ் கண்டியை அடைந்ததும் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முச்சக்கர வண்டியில் ஏற்றி நானும் ஏற முற்பட்டபோது மதகுருவுடன் துணைக்கு வந்திருந்த மதகுரு தங்களுக்கு சமாளித்துக்கொள்ள முடியும் என்றதும் ஓட்டுனரிடம் 100/= யை கொடுத்து வழியனுப்பினேன். வாந்தி பையை பஸ்ஸில் எனக்கு ஒத்தாசைக்காக பக்கத்தில் நின்ற பாரூக் நானாவிடம் ( மடவளை பங்களா கெதரயில் திருமணம் முடித்த கண்டியை சேர்ந்தவர்) கொடுத்து கழிவுத் தொட்டியில் போடும்படி கூறினேன்.பஸ்ஸை விட்டிரங்கிய மக்கள் தங்கள் பாட்டில் விரையும் நிலையில் பெண்கள் சிலர் என்னை சூழ்ந்து நன்றி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதிகமான நம் இனத்தவர் இருந்தும் யாரும் உதவிக்கு வரவில்லை என்பது வேதனையாக இருப்பதாகவும் கூறினர்.கற்ற பாடம்; #சூழ்நிலையை விளங்கிக் கொள்ளல்#அவசரமாக இயங்குதல்#உதவிகள் இல்லாதபோது எவ்வாறு சமாளிப்பது? #முடிந்தளவு பிறர் உதவியை நாடல்#எனக்கென்ன வென்று பின் வாங்காதிருத்தல்.இவற்றிற்கு மேலாக , இரக்க சுபாவம், உதவி செய்யும் பண்பு என்பன குலம் கோத்திரம் ஜாதி மதம் நிறம் என்பவற்றைத் தாண்டிய மனிதநேயம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் குடிகொண்டு நடைமுறைப்படுத்தினால் சமூகங்களுக்கிடையில் நல்லெண்ணத்தை (ஓரளவாவது) உருவாக்கலாம்.பூரண மனத்திருப்தியுடன் இன்றைய நாள் அமையப்பெற்றதற்கு காரணமான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.அல்ஹம்துலில்லாஹ்!சுல்பி சமீன்.22-02-2019
Publiée par நஜீப் எம் றபீஸ் sur Vendredi 22 février 2019
பலரும் உதவுங்கள், உதவுங்கள் என சத்தமிட்டனரே தவிர யாரும் உதவ முன்வரவில்லை. எனினும், பேருந்தில் பயணித்த குறித்த முஸ்லிம் நபர் விரைந்து செயற்பட்டு தேரருக்கு உதவினார்.
அத்துடன், குறித்த தேரரை கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கும் வகையிலும், அந்த நபர் உதவி செய்திருந்தார். இது குறித்த காணொளி ஒன்று சமூகவலை தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்நிலையில், தேரருக்கு உதவிய அந்த நபருக்கு முஸ்லிம் நபருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டு மழை குவிந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.