பதுளையில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்து வீடப்பட்ட பேப்ரில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்தினால் இளம் பெண் ஒருவர் வாழ்க்கையை தொலைத்த சம்பவம் ஒன்று பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கத்தினை இளைஞன் ஒருவரே மாணவியை நோக்கி வீசியள்ளார். பாடசாலை மாணவி ஒருவர் அந்த இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்த சென்று குறித்த இளைஞனுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த காதல் தொடர்பினால் கர்ப்பமாண மாணவி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் 15 வயதான மாணவி எனவும், சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் யார் என இன்னமும் தகவல் வெளியாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மாணவி 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் பத்திரிகை துண்டு ஒன்றில் தொலைபேசி இலக்கம் ஒன்று எழுதப்பட்டு அவரை நோக்கி வீசப்பட்டள்ளது. அந்த இலக்கத்திற்கு மாணவி அழைப்பேற்படுத்தியுள்ளார்.
அதில் உரையாடிய இளைஞனுடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. காதல் ஏற்பட்டவுடன் இருவரும் ஒரு தனிமையான இடத்தில் சந்தித்துள்ளனர்.
அங்கு பாலியல் ரீதியான உறவு ஏற்பட்டுள்ளது. சில நாட்களின் பின்னர் மாணவி நோய்வாய்ப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருக்கும் விடயம் தெரியவந்துள்ளது.
எனினும் அந்த இளைஞன் தொடர்பில் எந்த ஒரு தகவலையும் மாணவி அறிந்திராத நிலையில் பொலிஸார் விசாணைகளை ஆரம்பித்துள்ளனர்.