Loading...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மலையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அதன்படி அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு பொகவந்தலாவைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பொகவந்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள புதிய வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவே அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
Loading...
இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் 155 மில்லியன் ரூபாய் செலவிலும் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் 20 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
Loading...