Loading...
மலையகப் பகுதிகளில் சகல விதமான பால்மா வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மக்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இது குறித்து உடன் நடவடிக்கை மேற்கொண்டு வியாபார ஸ்தலங்களை பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரி முற்றுகையிட்டு பால்மாக்களை களஞ்சியபடுத்தி வைத்துள்ளவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாவனையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Loading...
இதற்கான அனுமதியை நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார வழங்க முன்வரவேண்டும் எனவும் அவரின் தலையீட்டால் பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.
Loading...